குழும விதிகள்
3 posters
Page 1 of 1
குழும விதிகள்
பொதுவிதி
உறுப்பினர் கணக்கு
பதிவுகள்
கையெழுத்து
விவாதக்களம்
உறுப்பினர்களுடன் பழகும் முறை:
குழுமத்தில் அமைதி, மகிழ்ச்சி, கண்ணியம் நிலவ விதிகளில் தேவைக்கேற்ப மாறுதல்கள் ஏற்படலாம். எனவே உறுப்பினர்கள் அவ்வப்போது விதிகளை மீள்பார்வை செய்து தெரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும்.
- இங்கே வருவது கவலையை மறக்க. எனவே முடிந்த வரை நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள் அடுத்தவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள்.
- எங்கேயும் தாக்குதல், ஆபாசம், மதம், இனம், ஜாதி இவை இல்லாமல் இருக்க வேண்டும்.
- யாரையும் புண்படுத்துதல் வேண்டாம்.
உறுப்பினர் கணக்கு
- ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
- ஒன்றுக்கு மேல் கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவை முடக்கப்படும்.
- கணக்கை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. பகிரப்பட்டாதாக அறியும் கணக்குகள் முடக்கப்படும்.
பதிவுகள்
- ஜாலியாக, உபயோகமாக, மொக்கையாக, நல்ல தகவலாக, சிறப்புகளைச் சொல்வதாக இருக்கவேண்டும்
- மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி திட்டும் பதிவுகள் வேண்டவே வேண்டாம்.
- அளவுக்கதிமான மேற்கோளைக் கொண்டதாக இருக்கக்கூடாது
- பதிவுகளில் கண்ணியமும் கட்டுப்பாடும் இழையோட வைப்பது உறுப்பினரின் கடமை.
- திரியோட்டத்தை தடை செய்யக் கூடாது; திசை திருப்பக் கூடாது.
- சொந்தப் பதிவுகளை அதற்குரிய இடத்திலும் மற்றதளப் பதிவுகளை அதற்குரிய இடத்திலும் பதித்து உண்மையான படைப்பாளிகளுக்கு மதிப்பு தரும் விதமாக அவரின் பெயர் / அல்லது மூலத்தளத்தின் பெயரைச் சொல்லி நன்றி தெரிவிக்க வேண்டும்
- அரசியல் களத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய, சமுதாயத்தை மேன்மைப்படுத்தக் கூடிய விடயங்களை மட்டும் பேசுங்கள். கட்சி ரீதியான ஆதரவு, எதிர்ப்புப் போக்கை அறவே தவிருங்கள்.
- விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்குண்டு.
கையெழுத்து
- 4 வரிக்கு மேல் வேண்டாம்
- எழுத்தின் அளவு சாதாரண அளவில் இருக்கவேண்டும்.
- படம் வைக்கிறவங்க கைநாட்டுன்னு அர்த்தமாம். அதனால படம் வேணாம்.
- கையெழுத்தை விட பதிவுகள் கட்டாயம் பெருசா இருந்தே ஆகணும்.
விவாதக்களம்
- வாதங்கள் சுவையாக இருக்கட்டும். தாக்குதல் வேண்டாம். கண்ணியமான வார்த்தைகளைக் கையாளுங்கள்.
- வாதத்தை தொடங்கி வைப்பவர் வாதத்தின் நோக்கத்தை மிகத்தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும்.
- குறித்த ஒரு விடயத்தை ஒருதடவைக்கு மேல் வாதிக்காதீர்கள்.
- விவாத முடிவை எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
- ஒரு மாதத்திற்கு மேல் விவாதிக்கப்படாத திரிகளில் கருத்துகள் பட்டியலாக தொகுக்கப்பட்டு முடிவுரை எழுதுதல் திரி தொடங்கியவ்ர் கடமை. அவரால் இயலாத பட்சத்தில் மேற்பார்வையாளர்களின் உதவியை நாடவும்.
உறுப்பினர்களுடன் பழகும் முறை:
- அன்பு, பண்பு, கண்ணியம் - தவறாமல் கடைபிடியுங்கள்
- இணையம் ஒரு மாய உலகம். எனவே எச்சரிக்கையைக் கடைபிடியுங்கள்
- உங்கள் சொந்தவிவரங்கள், படங்கள், தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
- தனிமடல் வசதியை தவறாக ப்யன்ப்டுத்தாதீர்க்ள்
குழுமத்தில் அமைதி, மகிழ்ச்சி, கண்ணியம் நிலவ விதிகளில் தேவைக்கேற்ப மாறுதல்கள் ஏற்படலாம். எனவே உறுப்பினர்கள் அவ்வப்போது விதிகளை மீள்பார்வை செய்து தெரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும்.
நேத்ரா- முதன்மை இயக்குனர்
- Number of posts : 290
Age : 44
Points :
Reputation : 0
Points : 269950
Registration date : 11/12/2008
Re: குழும விதிகள்
பொறுப்பாளர்களுக்கு வணக்கம்.
விதிகளை படித்து விட்டேன். (நினைவிலும் இருக்கும் என்றே நினைக்கிறேன்
)
அதிகபட்சமாக அனைத்தையும் சரியாக, முறையாக பின்பற்றுவேன்.
நன்றிகள்.
தமிழ்ப்பாவை

விதிகளை படித்து விட்டேன். (நினைவிலும் இருக்கும் என்றே நினைக்கிறேன்

அதிகபட்சமாக அனைத்தையும் சரியாக, முறையாக பின்பற்றுவேன்.
நன்றிகள்.
தமிழ்ப்பாவை
தமிழ்ப்பாவை- ஜாலி பங்காளி
- Number of posts : 12
Points :
Reputation : 0
Points : 268350
Registration date : 12/01/2009
Re: குழும விதிகள்
என்னால் இயன்றவரை விதிகைளை காத்து கண்ணியமாக இருப்பேன்.
கலாபன்- ஜாலி பங்காளி
- Number of posts : 69
Points :
Reputation : 0
Points : 267450
Registration date : 30/01/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|